Tuesday, April 27, 2010

மேதினப் பிரகடனம்


அடக்குமுறைகளை எதிர்கொண்டு முறியடிப்போம்! சிஐடியு - ஏஐடியுசி மேதினப் பிரகடனம்

-அ.சவுந்தரராசன் சிஐடியு எஸ்.எஸ்.தியாகராஜன் ஏஐடியுசி

மே தினத்தை முன்னிட்டு சிஐடியு மாநில பொதுச்செயலாளர் அ. சவுந்தரராசன், ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் எஸ்.எஸ். தியாகராஜன், ஆகியோர் விடுத்துள்ள கூட் டறிக்கை வருமாறு :-

உலகப் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து இன்னும் மீளவில்லை. முதலாளித்துவ முறை மையின் இந்த நெருக்கடிகள் தவிர்க்கவே முடியாதவை. உலகம் முழுக்க 24 கோடி பேர் வேலையிழந்துவிட்டனர். பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 1.5 பில்லி யன் (150 கோடி) என உலக வங்கியே கூறி யுள்ளது.

உலகமயம், சந்தைப்பொருளாதாரம் ஆகி யவை வளர்முக நாடுகளின் ஏழை மக்களை மிகக்கொடுமையாகச் சுரண்டுவதற்குத் துணை புரிகின்றன. தெற்காசிய நாடுகளில் மட்டுமே ஏழைகளின் எண்ணிக்கை 54.8 கோடியிலிருந்து 59.6 கோடியாக அதிகரித்து விட்டது.

பூமியில் கேடுகெட்ட முதலாளித்துவ சமூக அமைப்பு இருக்கும் வரையில் மனிதத் துயரம் முற்றாக தீர்க்கப்படவே முடியாது. இதனை மாற்றப் போராடுவதே தீர்வுக்கான பாதையாகும்.

இந்திய அளவிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை மேலும் அல்லல் மிக்கதாகியுள் ளது. நாளொன்றுக்கு நபருக்கு ரூ.20/-க்கு உட்பட்டு மட்டுமே செலவழிக்கும் நிலையில் 77 சத இந்திய மக்கள் உள்ளனர் என்று மேடைதோறும் இடதுசாரிகள் பேசுவது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் குறைபட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இது மத்திய அரசு அமைத்த அர்ஜூன்சென் குப்தா கமிட் டியின் அறிக்கையில் கூறப்பட்ட உண்மையா கும். இதையடுத்து அமைக்கப்பட்ட பிரத மரின் பொருளாதாரக் குழுவின் தலைவரான பேராசிரியர் சுரேஷ் டெண்டுல்கர் தலைமையி லான ஆய்வுக்குழுவோ, 45 கோடி இந்தியர் கள் மாதமொன்றுக்கு ரூ.447/-க்கான பொருட் களை மட்டுமே வாங்க முடிகிறது என்று கூறியிருக்கிறது. அதாவது தினம் ஒன்றுக்கு ரூ.14.50 பைசா மட்டுமே செலவழிக்க முடி யும். ஆக வறுமை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது என்பதை அரசின் ஆய்வுக்குழுக் களே, புள்ளி விபரம் தந்து தெளிவாக எடுத் துரைக்கின்றன.

ஆனால் மத்திய அரசோ, உலகின் பணக் கார நாடுகளை விடவும் நமது நாடு படுவேக மாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்று பெருமையடித்துக்கொள்கிறது.

அந்நிய மூலதனத்தின் அளவு கடந்த உள்நுழைவால், இந்திய தொழில் நிறுவனங் கள் ஆட்டங்கண்டுவிட்டன. கைத்தறி, கயிறு, பீடி, தீப்பெட்டி போன்ற பாரம்பரியத் தொழில்கள் சீரழிந்து சிதைந்துவிட்டன. ஆலைத்தொழில் நவீன இயந்திரமயமாகி தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டதோடு, நூறு ஆண்டுகளில் போராட்டத் தில் பெற்ற சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் பறிக்கப்படுகின் றன. தொழிற்சங்கம் வைக்கும் உரிமையே கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டது. “ தொழி லாளி” எனும் அடையாளம் கூட இல்லாத நிலை உருவாக்கப்படுகிறது. அரசின் துறைகள் அனைத்தும் முதலாளிக்குச் சாதகமாகவும், அந்நிய மூலதனக் கம்பெனிகளின் வேலை யாட்கள் போன்றும் நடந்து கொள்கின்றன.

தாராளமயம், தனியார்மயம் என குறை பாடுள்ள பொருளாதாரக் கொள்கையை கண் மூடித்தனமாக அரசு அமலாக்கிச்செல்வ தால், பொருளாதார, சமூகத் துறையில் அரசின் கட்டுப்பாடு கை நழுவி சென்றுவிட்டது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியா மல் அரசு திணறுகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் அத்தியாவசியப் பொருட்களின் சில் லரை விலை 51 சதம் உயர்ந்தும் அதைக் கட் டுப்படுத்த நடவடிக்கை எதுவும் இல்லை.

ஏழை, பணக்காரன் இடைவெளி வேக மாக அதிகரிக்கிறது. அதே போன்று மாநிலங் கள், வட்டாரங்களின் வளர்ச்சியிலும் கடும் ஏற்றத்தாழ்வு உள்ளது. தங்களின் சொந்த வாழ்விடமும், வாழ்க்கையும் பறிக்கப்பட்ட மக் களின் ஒரு பகுதியினர் விரக்தியின் எல் லைக்கு விரட்டப்பட்டுள்ளனர்.

இதனால் பல மாநிலங்களில் நக்சல் தீவிர வாதத்தால் அவர்களைப் பயன்படுத்த முடி கிறது. இந்தத் தவறான பாதையிலிருந்து மக் களை மீட்டெடுக்க சமூக, அரசியல், பொரு ளாதார அணுகுமுறையைப் பொருத்தமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதை ஒரு சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையாக்கி, சொந்த மக்கள் மீது யுத்தம் நடத்தும் நிலையை மேற்கொள்கிறது. இது ஆளும் கூட்டணிக் குள்ளேயே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் ஒரு மாவோயிஸ்ட் கூட இல்லை என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதன் மூலம் அவரது ஆதரவு நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.

உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம் கவலைக்குரியதாக உள்ளது.

மனிதருக்கான வாழ்க்கை மேம்பாடு காண்பதில் 132வது இடம் ; கல்வியறிவு தருவ தில் 148வது இடம் ; தனிநபர் உற்பத்தியில் 126வது இடம் ; ஆனால் பணக்காரர்கள், மிகக் கொழுத்த பணக்காரர்களாகி வருகின்றனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543 பேரில், 306 பேர் கோடீஸ்வரர்களாக உள்ள னர். முன்னெப்போதும் இல்லாத நிலை இது. தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை தந்து விலைக்கு வாங்குவது பரவலாகி விட்டது. தேர்தல் ஆணையம் செய்வதறியாது கை பிசைந்து நிற்கிறது. ஒட்டு மொத்தத்தில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டு வருகிறது.

தமிழ்நாட்டில் அந்நிய மூலதனத்தின் வரவு அதிகரித்துள்ளது என்பதை மாநில அரசு பெருமை தரும் விஷயமாகக் கருதுகிறது. எண்ணிறைந்த சலுகைகளோடு, இந்த மின்சார வெட்டுக் காலத்தில், வினாடியும் தடைபடாத மின்சாரத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. அதே நேரத்தில் தொழிலாளர் சட்டங்கள் எவையும் அவற்றில் அமல் நடத்தப்படாததையும் தொழிற்சங்கம் வைக்க முயலும் தொழிலாளர் கள் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருவதை யும் அரசு பார்க்க மறுக்கிறது.

தொழிற்சங்க அங்கீகாரத்தைக் கட்டாய மாக்கும் சட்டத்தை நிறைவேற்ற அரசு மறுக் கிறது. முதலாளிகள் செய்கிற பணிக்குழு போன்ற ஏற்பாடுகளுக்கு அரசு துணை நிற்கிறது.

தமிழகத்தின் பஞ்சாலைகளில் பல ஆயி ரக்கணக்கான இளம்பெண்களை “சுமங் கலித் திட்டம்” என்ற பெயரில் நவீன கொத்த டிமையாக்கும் முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தொழிலாளர் போராட்டங்களும், ஊடகங்களும் தொடர்ந்து இதை வெளிப்படுத்தியும் கூட மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட அள வில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்ட போது அதில் தொழிற்சங்கத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை அரசு ஏற்கவில்லை. அந்தக்குழு எதுவும் இப்போது செயல்படவும் இல்லை.

சமவேலைக்கு சம ஊதியம், பணியிடத் தில் பாலியல் சீண்டல்களைத் தடுக்க நடவ டிக்கை, வீட்டு வேலை தொழிலாளருக்கு தனிச்சட்டம், பதிவு செய்யப்பட்ட பெரும் பான்மை தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீ கரிப்பதற்கான சட்டம் உள்ளிட்ட தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை அரசு புறக் கணித்து வருகிறது.

தொழிலாளர் துறை செயலிழந்து கிடக் கிறது. தொழிற்சாலை ஆய்வகத்துறை, சட்ட மீறல்கள் எவ்வாறு செய்வது என முத லாளிகளுக்கு பயிற்றுவிக்கும் துறையாகிவிட் டது. காவல்துறையோ முதலாளிகளுக்கு ஆதரவோடு முனைப்பாக செயல்படுகிறது.

அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழி லாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்குத் தரப்பட்ட நல நிதித்தொகை ஆகிய விபரங் களை அவ்வப்போது வெளியிடுவதோடு, தொழிலாளர் துறையின் கடமை முடிந்துவிட் டதாகக் கருதப்படுகிறது. அதிலும் கூட நல உதவித் திட்டங்களில் மேம்பாடு கோரி லட் சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டங் கள் நடத்தி முன்வைக்கும் கோரிக்கைகள், தனது கவனத்திற்கு வந்ததாகக்கூட அரசு காட்டிக்கொள்வதில்லை.

உழைக்கும் மக்களின் உடனடிக் கோரிக் கைகளை முன்வைத்து இந்தியாவில் பெரிய தொழிற்சங்க அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்திருப்பதும் தொடர்ச்சியாக இயக் கங்களை நடத்தி வருவதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.

* விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண் டும் ; பொது வினியோகத்திட்டத்தை பலப்படுத்தி விரிவு செய்ய வேண்டும் ; ஊக வணிகத்தை ஒழிக்க வேண்டும்.

* வேலை உத்தரவாதம் வேண்டும். தொழி லாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை உறுதிப்படுத்தினால்தான், நிறுவனங் களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.

* தொழிற்சங்க அங்கீகாரத்தை சட்ட கட் டாயமாக்க வேண்டும்.

* அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் உறுதியாக அமல்படுத்த வேண்டும்.

* அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு தேசிய நிதியம் உருவாக்க வேண்டும்.

* லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கக்கூடாது.

ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி சங்க பேதமின்றி தொழிலாளர்கள் ஒன்றி ணைந்து போராடும் சூழல் தோற்றுவிக்கப் பட்டுவிட்டது. இதைப் பெருந்திரள் மிக்கதாக வும், இலக்கு நோக்கி நகர்வதாகவும், மத்திய அரசின் கொடூரமான பொருளாதாரக்கொள்கை களை தகர்ப்பதாகவும் எடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.

உழைக்கும் மக்களின் உலகம் தழுவிய ஒற்றுமையை பறைசாற்றும் திருநாளாம் மே தினத்தில், அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடி உயிர் நீத்த தியாகிகள் அனைவரை யும் பெருமிதத்தோடு, நினைவு கூர்ந்து தொழி லாளர் உரிமைப்போராட்டங்களை முன்னெ டுப்போம்.

உலகத் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!

மேதினம் நீடூழி வாழ்க!!

source theekathir.com

Saturday, April 24, 2010

nuclear deal

மன்மோகன் அரசாங்கம் மென்மேலும் அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு வெண்சாம ரம் வீசும் பாதையில் சென்று கொண்டுள்ளது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி மட்டு மல்ல, தேசத்தின் இறையாண்மை மீது பற் றுள்ள பலரும் குற்றம் சாட்டுகின்றனர். அணு சக்தி ஒப்பந்தத்தை அமல்படுத்தும் பணியில் இது அப்பட்டமாக வெளிப்பட்டு வருகிறது.

தனது அணு மின் நிலையங்களை அமைப்பதற்கு முன்பு சூரஉடநயச டயைbடைவைல bடைட எனப்படும்அணு விபத்து இழப்பீடு சட்டம்இந்தியா இயற்ற வேண்டும் எனவும் அச்சட் டத்தில் விபத்து நேரிட்டால் தன் நாட்டு நிறுவனங்களுக்கு இழப்பீடு என்ற பெயரில் பெரிய நிதிச்சுமையை ஏற்படுத்தக்கூடாது எனவும் அமெரிக்கா நிர்ப்பந்தித்தது. இதனை எவ்வித கூச்சநாச்சமும் இன்றி மன்மோகன் அரசாங்கம் ஏற்றுக்கொண்டு ஒரு சட்ட முன்வரைவை முன்வைத்துள்ளது. இது ஒரு அப்பட்டமான அமெரிக்க அடிமைச்சாசனம் எனில் மிகையல்ல.

அணு உலையில் விபத்து நேரிட்டால் அதற் கான மொத்த இழப்பீடு ரூ.2120 கோடி (460 மில்லியன் டாலர்கள்) மட்டுமே தரப்படும் என உச்சவரம்பு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதுவே மிகவும் குறைவானது என நியாய மான கருத்து உள்ளது. போபால் நச்சுவாயு விபத்து வழக்கில் 1991ம் ஆண்டே உச்சநீதி மன்றம் இழப்பீடு தொகையை ரூ.2170 கோடி என நிர்ணயித்துள்ளது. கடந்த இருபது ஆண் டுகளில் உள்ள பணவீக்கத்தை கணக்கில் கொண்டால் இந்த தொகை ரூ.10,000 கோடிக் கும் அதிகமாக இருக்கும். நச்சுவாயு விபத் தைவிட மிக மிக அதிகமாக பாதிப்புகளை ஏற் படுத்தும் அணு உலை விபத்திற்கு இழப்பீடு ரூ.2170 கோடி என்பது மிகவும் குறைவு.

இந்த இழப்பீடு ரூ.2170 கோடியில் அணு ஆலைகளை நிர்மாணிக்கும் அமெரிக்க நிறு வனங்கள் தரவேண்டிய இழப்பீடு ரூ.500 கோடி இருந்தால் போதுமானது என சட்ட முன்வரைவு கூறுகிறது. அமெரிக்க ஆளும் வர்க்கங்கள் சொன்னதை சிரமேற்கொண்டு செயல்படும் ஆட்சியாளர்களாக நமது அர சாங்கம் உள்ளது. இந்திய மண்ணில் அணு உலைகளை அமெரிக்க நிறுவனங்கள் அமைக்குமாம்! கோடி கோடியாக இலாபம் ஈட்டுவார்களாம்! ஆனால் விபத்து நடந்தால் ரூ.500 கோடிக்கு மேல் இழப்பீடு என்பதை ஏற்றுக் கொள்ள மாட்டார்களாம்! அதனை சிறிதும் வெட்கமின்றி மத்திய அரசு தலை யாட்டி பொம்மையாக சரி என்கிறது.

உலகில் உள்ள வேறு சில நாடுகள் இந்த இழப்பீடு தொகையை எந்த அளவிற்கு நிர்ண யித்துள்ளன என்பதை ஒப்பீடு செய்தால் மன்மோகன் அரசின் அமெரிக்க தலையாட் டுத் தன்மையை நாம் புரிந்து கொள்ள இயலும்.

மன்மோகன் அரசாங்கத்திற்கு ரூ.500 கோடி என இழப்பீடு உச்சவரம்பை நிர்ண யிக்க நிர்ப்பந்திக்கும் அதே அமெரிக்காவில் இந்த இழப்பீடு தொகை ரூ.4,95,000 கோடி என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. தனது தேச மக்களின் உயிர் மேலானது என எண்ணும் அமெரிக்க ஏகாதிபத்தியம், இந்திய மக்களின் உயிர்களை கிள்ளுக்கீரையாக எண்ணுகிறது என்பது இதிலிருந்து தெளிவாகும். இந்த விவரங்கள் தெரிந்திருந்தும் மன்மோகன் சிங் அரசு அமெரிக்காவின் நிர்ப்பந்தத்திற்கு அடிபணிந் துள்ளது என்பது எவ்வளவு கொடுமையான ஒன்று?

வேறு சில நாடுகளின் இழப்பீடு தொகை பற்றிய விவரங்கள்:

ஜெர்மனி ரூ.152000 கோடி, சுவிட்சர் லாந்து ரூ.68200 கோடி, பின்லாந்து ரூ. 93000 கோடி, கனடா ரூ.30000 கோடி. சுவிட்சர் லாந்து, பின்லாந்து போன்ற சிறிய நாடுகள் கூட இழப்பீடு தொகையை கணிசமாக நிர்ணயித்திருக்கும் பொழுது, மன்மோகன் அர சாங்கம் வெறும் ரூ.500 கோடியை ஏற்றுக் கொண்டது அடிமைச்சாசனம் என்றால் மிகையாகுமா?

அணு உலை விபத்து எத்தகைய பின் விளைவுகளை ஏற்படுத்தும் என்பது உல கமே அறிந்த ஒன்று. அதற்கு நாகசாகி, ஹிரோசிமா குண்டுவீச்சு மட்டுமல்ல; செர் னோபில் போன்ற விபத்துக்களும் சாட்சி களாக உள்ளன. இவற்றையெல்லாம் புறக் கணித்துவிட்டு மன்மோகன் அரசாங்கம் அமெரிக்க நோக்கத்தை நிறைவேற்றிட முயன்றால் மக்கள் அதை முறியடிப்பார்கள்.

source: Theekathir

DYFI demonstration



DYFI muthiyalpet unit conference resolution made on 20th April 2010. demand of conference muthiyalpet area basic facility.

Thursday, April 22, 2010

வில்லாபுரத்து வீராங்கனை லீலாவதி


வில்லாபுரத்து வீராங்கனை லீலாவதி
-பாப்பா உமாநாத்

13 ஆண்டுகள் உருண்டோடிவிட் டன. ஆனால் இன்றும் அந்த நாள் என் நெஞ்சில் நீங்காத் துயரத்தை ஏற்றிவிட்டு நிரந்தரமாகக் குடியேறியுள்ளது. ஆம், 1997ம் ஆண்டு ஏப்ரல் மாதம் 23ம் நாள் தான் அது. இடதுசாரி இயக்கத்திற்கு, குறிப்பாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சிக்கு பேரிழப்பை ஏற்படுத்திய நாள். அரு மைத் தோழர் கே.லீலாவதி, ஆறு சமூக விரோதிகளால் வெட்டி வீழ்த்தப்பட்ட நாள்.

லீலாவதி, ஒரு ஏழை நெசவாளி குடும்பத்தில் 1957ம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ம் நாள் பிறந்தார். குடும்பத்தின் வறுமை காரணமாக 10ம் வகுப்பு படிக்கும் போது பள்ளிப்படிப்பை நிறுத்திவிட்டு வீட் டில் நெசவு வேலை செய்தார். ஆனால் பள்ளிப்படிப்பை நிறுத்தினாலும் படிப் பதை நிறுத்தவில்லை. பொது நூலகத் தில் உறுப்பினராகி நூல்களை வாங்கி தொடர்ந்து படித்து பொது அறிவை வளர்த் துக்கொண்டார்.

மக்கள் அமைப்புகளில் தீவிர ஆர்வங் காட்டி வந்த லீலாவதி 1987ம் ஆண்டு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் உறுப்பினர் ஆனார். ஜனநாயக வாலிபர் சங்கத்தின் மாநிலக்குழு உறுப்பினராக வும், கைநெசவுத் தொழிலாளர் சம்மேளன மாநிலத் துணைத்தலைவராகவும் ஆனார். பின்னர் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட் சியின் மதுரை மாவட்டக்குழு உறுப்பின ரானார். இவ்வாறு தன் இடைவிடாத உழைப்பின் மூலம் பொது வாழ்வில் அவர் உயர்ந்து கொண்டே இருந்தார்.

லீலாவதி ஒரு கைத்தறி நெசவாளி. அவருடைய வீட்டிற்குப் போனால் மேல்பகுதியில் தறிநூல் கட்டியிருக்கும். கீழேதான் பாய்போட்டு படுத்திருப்போம். கைத்தறி சேலை பற்றி பட்டுக்கோட்டை யார் பாடிய பாடலை என்னைப் பாடச் சொல்லிக் கேட்பார்.

“சின்னச் சின்ன இழை

பின்னிப் பின்னி வரும்

சித்திரக் கைத்தறிச் சேலையடி

தென்னாட்டில் எந்நாளும்

கொண்டாடும் வேளையடி”

என்று நான் பாடினால், கேட்டு மகிழ்ந்து மனதில் பதித்துக் கொள்வார். அவரது சிரித்த முகத்தை உற்றுப்பார்த்துக் கண் களை மூடிக்கொண்டால், கண்களுக்குள் அவரது சிரித்த முகம் கண்ணாடியில் பார்ப்பது போல் பளிச்சென்று தோன்றும்.

மாதர் இயக்கத்தின் மங்காப்புகழ் பெற்ற லீலாவதி சுறுசுறுப்பான ஊழியர். தான் வாழ்ந்த பகுதி மக்களின் அடிப் படைப் பிரச்சனைகளைத் தீர்ப்பதற் காகப் போராடியவர். தனது அரசியல், சமூக சேவை பணி மூலம் அப்பகுதியில் மிகவும் பிரபலமானவராக விளங்கினார். ரேசன் கடை முறைகேடுகள், மாநகராட்சி யின் இலவசக் குடிநீரைக் காசுக்கு விற் பது போன்ற சமூக விரோதச் செயல்களை எதிர்த்து தொடர்ந்து குரல் எழுப்பினார். இன்னலுறும் ஏழை, எளிய மக்களின் துயர் துடைக்க இடைவிடாது பாடுபட்டு வந்த லீலாவதி, மதுரை மாமன்ற 59வது வட்ட உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப் பட்டதில் எந்தவித ஆச்சரியமுமில்லை. மாமன்ற உறுப்பினரானது முதல் லீலா வதியின் பொதுப்பணி மிகவும் அதிக ரித்தது. கோரிக்கை மனுக்களை பெற்று, அவை ஒவ்வொன்றுக்கும் கைப்பட கடி தம் எழுதி சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு அனுப்புவது, மாமன்ற கூட்டங்களுக்கு செல்வது, தினமும் காலையில் தனது வட்டத்திற்குட்பட்ட தெருக்களுக்குச் சென்று மக்களைச் சந்திப்பது போன்ற ஒவ்வொரு பணியையும் நேர்த்தியுடன் செய்துவந்தார்.

“அடிப்படை உரிமைகளுக்கும் மக்க ளின் வாழ்வாதாரப் பிரச்சனைகளுக்கும் வாதாடுவதும் போராடுவதும் தவறான செயலல்ல” என்று மதுரை மாமன்றத் தில் முழங்கியவர் தோழர் லீலாவதி. முழங்கியதோடு மட்டுமல்ல, காரியங் களை முடித்துக் காட்டினார் லீலாவதி. வில்லாபுரம் பகுதியில் மாநகராட்சி சார் பாக லாரியில் விநியோகிக்கப்படும் குடி நீரை விலைக்கு விற்ற அவலத்தைப் போக்க குழாய் மூலம் குடிநீர் வழங்க ஏற் பாடுகளை செய்தார். ரேசன் கடைகளில் சமூக விரோதிகளின் தலையீட்டைத் தடுத்து நிறுத்தி, எடை குறையாமல் பொதுமக்களுக்குப் பொருட்கள் கிடைக் கச் செய்தார். பொறுக்குமா கொள்ளைய டித்து வந்த கும்பல். மேலும் மாமூல் வசூ லிப்பதற்கு எதிராக வர்த்தகர்கள் நடத்திய கடையடைப்புக்கு ஆதரவாக முன்னின் றார் லீலாவதி. எனவே அவரைக் கொன்றே தீருவது என்ற வெறித்தனத்தில் இறங்கி யது சமூக விரோதக்கும்பல். உரிய நேரம் பார்த்திருந்தது.

1997ம் ஆண்டு ஏப்ரல் 23ம் நாள் காலை உணவு தயாரித்துக் கொடுக்க எண்ணெய் வாங்க வந்த அவரை சுற்றி வளைத்து வெட்டிக்கொன்றனர் கொலை பாதகர்கள். மக்கள் நலனுக்காக தன்னு யிரை துச்சமென நினைத்துப் பாடுபட்ட லீலாவதி, மக்களுக்காகவே உயிர்நீத்தார். மக்களுக்காக, மார்க்சிய லட்சியத்திற் காக உலகம் முழுவதும் தங்கள் இன்னு யிரை அர்ப்பணித்த ஆயிரமாயிரம் தியாகி களின் வரிசையில் லீலாவதி மகத்தான இடத்தைப் பெற்றுவிட்டார்.

லீலாவதியின் ஒப்பற்ற தியாகம் தமிழ கத்தில் மட்டுமல்ல; இந்திய நாடு முழு வதிலும் பேசப்படுகிறது. அவர் கொலை யுண்ட தருணத்தில் பல்வேறு அரசியல் கட்சிகளின் தலைவர்களும், மக்கள் இயக்கங்களின் தலைவர்களும் அவரு டைய இல்லத்திற்குச் சென்று அவரது திருவுருவப் படத்திற்கு மலர்மாலை சூட்டி மரியாதை செய்தது அவரது ஒப்பற்ற தியா கத்திற்கு செய்யப்பட்ட மரியாதையாகும். எனவேதான் தினமணி நாளேடு.

“லீலாவதியின் வீடு தமிழகத்தில் அறி விக்கப்படாததொரு நினைவுச்சின்ன மாக இன்று மாறிவிட்டது” என்று தலை யங்கம் தீட்டியது.

பல கவிஞர்கள் அன்று கவிதாஞ்சலி செய்தனர். கவிஞர் சு.மாரியப்பனின் கவிதையோடு நினைவஞ்சலி நிறைவு பெறுவது சிறப்பானதாகும்.

“சாவே இல்லை உனக்கு!

மதுரை மக்கள் மனதில்

வாழ்ந்த நீ

தமிழக மக்கள் மனதில்

குடியேறி விட்டாய்!

இனி எங்கள் சந்ததியை

சொல்லி வளர்ப்போம்

வாழ்ந்தால் லீலாவதியாய்

வாழு என்று!”

லீலாவதி சிந்திய இரத்தத் துளிகளி லிருந்து இன்று ஓராயிரம் லீலாவதிகள் உருவாகிக் கொண்டிருக்கிறார்கள். வில்லாபுரத்து வீராங்கனை லீலாவதி யின் நினைவுக்கு செவ்வணக்கம்! செவ்வணக்கம்! செவ்வணக்கம்!


source : Theekathir

Tuesday, April 20, 2010

D.Ted. continues 48 hours hunger strike


To change employment policies 109(G). To new job in government employment in seniority basics around 200 unemployment youth are participated hunger strike these strike organized by Democratic youth federation of india in puducherry pradesh committee

27th All India Strick



Against price rising left parties including 13 parties are called to common strike against price rising. All parties press meet at pondicherry

Thursday, April 15, 2010

DYFI hunger strike


Democratic Youth Federation of India Puducherry Pradesh committee Town unit one day hunger strike. Government of Puducherry Electricity department employment policy

Saral 2010 SFI kalai vizha






Wednesday, April 14, 2010

Tuesday, April 13, 2010

Student suicide ar M.I.T.

Manacular Vinayagar Institute of Enggineering Madagadipet Student are suicide at Mind disturb in last five year 5 student are suicide 2005-06 Nagaraj Madurai, 2010-11 Gunasekaran Thirubuvanai.

Sunday, April 11, 2010

Bhagat Singh


Student Federation of India and Democrtic Youth Federation of India Puducherry Pradesh Committee