| மே தினத்தை முன்னிட்டு சிஐடியு மாநில பொதுச்செயலாளர் அ. சவுந்தரராசன், ஏஐடியுசி மாநில பொதுச்செயலாளர் எஸ்.எஸ். தியாகராஜன், ஆகியோர் விடுத்துள்ள கூட் டறிக்கை வருமாறு :-
உலகப் பொருளாதாரம் நெருக்கடியிலிருந்து இன்னும் மீளவில்லை. முதலாளித்துவ முறை மையின் இந்த நெருக்கடிகள் தவிர்க்கவே முடியாதவை. உலகம் முழுக்க 24 கோடி பேர் வேலையிழந்துவிட்டனர். பட்டினியால் வாடும் மக்களின் எண்ணிக்கை 1.5 பில்லி யன் (150 கோடி) என உலக வங்கியே கூறி யுள்ளது.
உலகமயம், சந்தைப்பொருளாதாரம் ஆகி யவை வளர்முக நாடுகளின் ஏழை மக்களை மிகக்கொடுமையாகச் சுரண்டுவதற்குத் துணை புரிகின்றன. தெற்காசிய நாடுகளில் மட்டுமே ஏழைகளின் எண்ணிக்கை 54.8 கோடியிலிருந்து 59.6 கோடியாக அதிகரித்து விட்டது.
பூமியில் கேடுகெட்ட முதலாளித்துவ சமூக அமைப்பு இருக்கும் வரையில் மனிதத் துயரம் முற்றாக தீர்க்கப்படவே முடியாது. இதனை மாற்றப் போராடுவதே தீர்வுக்கான பாதையாகும்.
இந்திய அளவிலும் உழைக்கும் மக்களின் வாழ்க்கை மேலும் அல்லல் மிக்கதாகியுள் ளது. நாளொன்றுக்கு நபருக்கு ரூ.20/-க்கு உட்பட்டு மட்டுமே செலவழிக்கும் நிலையில் 77 சத இந்திய மக்கள் உள்ளனர் என்று மேடைதோறும் இடதுசாரிகள் பேசுவது பற்றி மத்திய உள்துறை அமைச்சர் குறைபட்டுக் கொண்டிருக்கிறார். ஆனால் இது மத்திய அரசு அமைத்த அர்ஜூன்சென் குப்தா கமிட் டியின் அறிக்கையில் கூறப்பட்ட உண்மையா கும். இதையடுத்து அமைக்கப்பட்ட பிரத மரின் பொருளாதாரக் குழுவின் தலைவரான பேராசிரியர் சுரேஷ் டெண்டுல்கர் தலைமையி லான ஆய்வுக்குழுவோ, 45 கோடி இந்தியர் கள் மாதமொன்றுக்கு ரூ.447/-க்கான பொருட் களை மட்டுமே வாங்க முடிகிறது என்று கூறியிருக்கிறது. அதாவது தினம் ஒன்றுக்கு ரூ.14.50 பைசா மட்டுமே செலவழிக்க முடி யும். ஆக வறுமை நாளுக்கு நாள் அதிகரித்துச் செல்கிறது என்பதை அரசின் ஆய்வுக்குழுக் களே, புள்ளி விபரம் தந்து தெளிவாக எடுத் துரைக்கின்றன.
ஆனால் மத்திய அரசோ, உலகின் பணக் கார நாடுகளை விடவும் நமது நாடு படுவேக மாக வளர்ச்சியடைந்து கொண்டிருக்கிறது என்று பெருமையடித்துக்கொள்கிறது.
அந்நிய மூலதனத்தின் அளவு கடந்த உள்நுழைவால், இந்திய தொழில் நிறுவனங் கள் ஆட்டங்கண்டுவிட்டன. கைத்தறி, கயிறு, பீடி, தீப்பெட்டி போன்ற பாரம்பரியத் தொழில்கள் சீரழிந்து சிதைந்துவிட்டன. ஆலைத்தொழில் நவீன இயந்திரமயமாகி தொழிலாளர்களின் எண்ணிக்கை குறைக்கப் பட்டதோடு, நூறு ஆண்டுகளில் போராட்டத் தில் பெற்ற சட்டபூர்வமான உரிமைகள் அனைத்தும் ஒவ்வொன்றாய் பறிக்கப்படுகின் றன. தொழிற்சங்கம் வைக்கும் உரிமையே கேள்விக்குறியாக்கப்பட்டுவிட்டது. “ தொழி லாளி” எனும் அடையாளம் கூட இல்லாத நிலை உருவாக்கப்படுகிறது. அரசின் துறைகள் அனைத்தும் முதலாளிக்குச் சாதகமாகவும், அந்நிய மூலதனக் கம்பெனிகளின் வேலை யாட்கள் போன்றும் நடந்து கொள்கின்றன.
தாராளமயம், தனியார்மயம் என குறை பாடுள்ள பொருளாதாரக் கொள்கையை கண் மூடித்தனமாக அரசு அமலாக்கிச்செல்வ தால், பொருளாதார, சமூகத் துறையில் அரசின் கட்டுப்பாடு கை நழுவி சென்றுவிட்டது. விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த முடியா மல் அரசு திணறுகிறது. கடந்த 3 மாதங்களில் மட்டும் அத்தியாவசியப் பொருட்களின் சில் லரை விலை 51 சதம் உயர்ந்தும் அதைக் கட் டுப்படுத்த நடவடிக்கை எதுவும் இல்லை.
ஏழை, பணக்காரன் இடைவெளி வேக மாக அதிகரிக்கிறது. அதே போன்று மாநிலங் கள், வட்டாரங்களின் வளர்ச்சியிலும் கடும் ஏற்றத்தாழ்வு உள்ளது. தங்களின் சொந்த வாழ்விடமும், வாழ்க்கையும் பறிக்கப்பட்ட மக் களின் ஒரு பகுதியினர் விரக்தியின் எல் லைக்கு விரட்டப்பட்டுள்ளனர்.
இதனால் பல மாநிலங்களில் நக்சல் தீவிர வாதத்தால் அவர்களைப் பயன்படுத்த முடி கிறது. இந்தத் தவறான பாதையிலிருந்து மக் களை மீட்டெடுக்க சமூக, அரசியல், பொரு ளாதார அணுகுமுறையைப் பொருத்தமாக மாற்றியமைக்க வேண்டியதன் அவசியத்தை அரசு உணர்ந்ததாகத் தெரியவில்லை. அதை ஒரு சட்டம்-ஒழுங்குப் பிரச்சனையாக்கி, சொந்த மக்கள் மீது யுத்தம் நடத்தும் நிலையை மேற்கொள்கிறது. இது ஆளும் கூட்டணிக் குள்ளேயே புகைச்சலை ஏற்படுத்தியுள்ளது. மேற்குவங்கத்தில் ஒரு மாவோயிஸ்ட் கூட இல்லை என்று ரயில்வே அமைச்சர் மம்தா பானர்ஜி கூறியதன் மூலம் அவரது ஆதரவு நிலையை வெளிப்படுத்தியுள்ளார்.
உலக நாடுகளின் பட்டியலில் இந்தியா வகிக்கும் இடம் கவலைக்குரியதாக உள்ளது.
மனிதருக்கான வாழ்க்கை மேம்பாடு காண்பதில் 132வது இடம் ; கல்வியறிவு தருவ தில் 148வது இடம் ; தனிநபர் உற்பத்தியில் 126வது இடம் ; ஆனால் பணக்காரர்கள், மிகக் கொழுத்த பணக்காரர்களாகி வருகின்றனர். இந்திய நாடாளுமன்ற உறுப்பினர்கள் 543 பேரில், 306 பேர் கோடீஸ்வரர்களாக உள்ள னர். முன்னெப்போதும் இல்லாத நிலை இது. தேர்தலில் ஒரு ஓட்டுக்கு ஆயிரம் ரூபாய் வரை தந்து விலைக்கு வாங்குவது பரவலாகி விட்டது. தேர்தல் ஆணையம் செய்வதறியாது கை பிசைந்து நிற்கிறது. ஒட்டு மொத்தத்தில் ஜனநாயகம் கேலிக் கூத்தாக்கப்பட்டு வருகிறது.
தமிழ்நாட்டில் அந்நிய மூலதனத்தின் வரவு அதிகரித்துள்ளது என்பதை மாநில அரசு பெருமை தரும் விஷயமாகக் கருதுகிறது. எண்ணிறைந்த சலுகைகளோடு, இந்த மின்சார வெட்டுக் காலத்தில், வினாடியும் தடைபடாத மின்சாரத்தை வெளிநாட்டு நிறுவனங்களுக்கு வழங்குகிறது. அதே நேரத்தில் தொழிலாளர் சட்டங்கள் எவையும் அவற்றில் அமல் நடத்தப்படாததையும் தொழிற்சங்கம் வைக்க முயலும் தொழிலாளர் கள் தொடர்ந்து பழிவாங்கப்பட்டு வருவதை யும் அரசு பார்க்க மறுக்கிறது.
தொழிற்சங்க அங்கீகாரத்தைக் கட்டாய மாக்கும் சட்டத்தை நிறைவேற்ற அரசு மறுக் கிறது. முதலாளிகள் செய்கிற பணிக்குழு போன்ற ஏற்பாடுகளுக்கு அரசு துணை நிற்கிறது.
தமிழகத்தின் பஞ்சாலைகளில் பல ஆயி ரக்கணக்கான இளம்பெண்களை “சுமங் கலித் திட்டம்” என்ற பெயரில் நவீன கொத்த டிமையாக்கும் முறை பல ஆண்டுகளாக நடைமுறையில் உள்ளது. தொழிலாளர் போராட்டங்களும், ஊடகங்களும் தொடர்ந்து இதை வெளிப்படுத்தியும் கூட மாநில அரசு நடவடிக்கை எடுக்கவில்லை. மாவட்ட அள வில் கண்காணிப்புக்குழு அமைக்கப்பட்ட போது அதில் தொழிற்சங்கத்தையும் சேர்க்க வேண்டும் என்பதை அரசு ஏற்கவில்லை. அந்தக்குழு எதுவும் இப்போது செயல்படவும் இல்லை.
சமவேலைக்கு சம ஊதியம், பணியிடத் தில் பாலியல் சீண்டல்களைத் தடுக்க நடவ டிக்கை, வீட்டு வேலை தொழிலாளருக்கு தனிச்சட்டம், பதிவு செய்யப்பட்ட பெரும் பான்மை தொழிற்சங்கத்தை நிர்வாகம் அங்கீ கரிப்பதற்கான சட்டம் உள்ளிட்ட தொழிற் சங்கங்களின் கோரிக்கைகளை அரசு புறக் கணித்து வருகிறது.
தொழிலாளர் துறை செயலிழந்து கிடக் கிறது. தொழிற்சாலை ஆய்வகத்துறை, சட்ட மீறல்கள் எவ்வாறு செய்வது என முத லாளிகளுக்கு பயிற்றுவிக்கும் துறையாகிவிட் டது. காவல்துறையோ முதலாளிகளுக்கு ஆதரவோடு முனைப்பாக செயல்படுகிறது.
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான நலவாரியங்களில் பதிவு செய்துள்ள தொழி லாளர்களின் எண்ணிக்கை, அவர்களுக்குத் தரப்பட்ட நல நிதித்தொகை ஆகிய விபரங் களை அவ்வப்போது வெளியிடுவதோடு, தொழிலாளர் துறையின் கடமை முடிந்துவிட் டதாகக் கருதப்படுகிறது. அதிலும் கூட நல உதவித் திட்டங்களில் மேம்பாடு கோரி லட் சக்கணக்கான தொழிலாளர்கள் போராட்டங் கள் நடத்தி முன்வைக்கும் கோரிக்கைகள், தனது கவனத்திற்கு வந்ததாகக்கூட அரசு காட்டிக்கொள்வதில்லை.
உழைக்கும் மக்களின் உடனடிக் கோரிக் கைகளை முன்வைத்து இந்தியாவில் பெரிய தொழிற்சங்க அமைப்புகள் அனைத்தும் ஒன்று சேர்ந்திருப்பதும் தொடர்ச்சியாக இயக் கங்களை நடத்தி வருவதும் நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளது.
* விலை உயர்வைக் கட்டுப்படுத்த வேண் டும் ; பொது வினியோகத்திட்டத்தை பலப்படுத்தி விரிவு செய்ய வேண்டும் ; ஊக வணிகத்தை ஒழிக்க வேண்டும்.
* வேலை உத்தரவாதம் வேண்டும். தொழி லாளர்களின் சட்டபூர்வ உரிமைகளை உறுதிப்படுத்தினால்தான், நிறுவனங் களுக்கு அரசு நிதியுதவி வழங்க வேண்டும்.
* தொழிற்சங்க அங்கீகாரத்தை சட்ட கட் டாயமாக்க வேண்டும்.
* அடிப்படை தொழிலாளர் சட்டங்கள் அனைத்தையும் உறுதியாக அமல்படுத்த வேண்டும்.
* அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கு தேசிய நிதியம் உருவாக்க வேண்டும்.
* லாபம் ஈட்டும் பொதுத்துறை நிறுவனப் பங்குகளை விற்கக்கூடாது.
ஆகிய கோரிக்கைகளை முன்னிறுத்தி சங்க பேதமின்றி தொழிலாளர்கள் ஒன்றி ணைந்து போராடும் சூழல் தோற்றுவிக்கப் பட்டுவிட்டது. இதைப் பெருந்திரள் மிக்கதாக வும், இலக்கு நோக்கி நகர்வதாகவும், மத்திய அரசின் கொடூரமான பொருளாதாரக்கொள்கை களை தகர்ப்பதாகவும் எடுத்துச் செல்லும் பெரும் பொறுப்பு நமக்கு இருக்கிறது.
உழைக்கும் மக்களின் உலகம் தழுவிய ஒற்றுமையை பறைசாற்றும் திருநாளாம் மே தினத்தில், அடக்குமுறைகளை எதிர்கொண்டு போராடி உயிர் நீத்த தியாகிகள் அனைவரை யும் பெருமிதத்தோடு, நினைவு கூர்ந்து தொழி லாளர் உரிமைப்போராட்டங்களை முன்னெ டுப்போம்.
உலகத் தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக!
மேதினம் நீடூழி வாழ்க!! source theekathir.com
|
No comments:
Post a Comment