Friday, November 12, 2010

அமெரிக்க தலையீட்டை கண்டித்து

இந்திய ஆசிய விவகாரங்களில் அமெரிக்க தலையீட்டை கண்டித்து, மார்க்சிஸ்ட், இந்திய கம்யூனிஸ்ட் உள்ளிட்ட ஐந்து இடதுசாரி கட்சிகளின் சார்பில புதுச்சேரி தலைமை தபால் நிலையம் எதிரில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைப்பெற்றது.
இந்திய தொழில்துறையை கபலிகரம் செய்;ய வந்துள்ள அமெரிக்க அதிபர் ஒபாமாவை கண்டித்தும், போபால் வி~வாயு விபத்தின் குற்றவாளி ஆன்டர்சனை இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டும். இந்திய- அமெரிக்க பாதுகாப்பு ஒப்பந்தத்தை ரத்து செய்ய வேண்டும். கியூபா மீதான பொருளாதாரத் தடையை நீக்க வேண்டும். ஈராக்கில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஐம்பதாயிரம் படையினரையும் உடனடியாக திரும்பப் பெற வேண்டும.; என்பன கோரிக்கைகளை முன் வைத்து இப்போராட்டம் நடைப்பெற்றது.
இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு இந்திய கம்யூனிஸ்ட் மாநிலத் துணை செயலாளர் கீதநாதன் தலைமை தாங்கினார். மார்க்சிஸ்ட் கட்சியின் பிரதேச செயலாளர் வி. பெருமாள், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் நாரா கலைநாதன், இந்திய கம்யூனிஸ்ட்(எம்.எல்) கட்சியின் மாநில பொதுசெயலாளர் சோ.பாலசுப்ரமணியன், பார்வர்டு பிளாக் கட்சியின் மாநிலத் தலைவர் முத்து, புரட்சிகர சோசலிஸ்ட் கட்சியின் மாநிலத் தலைவர் லெனின் ஆகியோர் கண்டன உரை ஆற்றினார்கள்.
இப்போராட்டத்தில் ஐந்து இடதுசாரிகட்சி தலைவர்கள் மற்றும் தொண்டர்கள் திரளாக பங்கேற்றனர்.






புதுச்சேரி நவ 8
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் இயங்கி வந்த நாடக தந்தை சங்கரதாஸ் நிகழ்கலை நாடகப்பள்ளியின் பெயரை நீக்கியதிற்க்கு தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கம் கண்டனம் தெரிவித்துள்ளது.
தமிழ்நாடு முற்போக்கு எழுத்தாளர் கலைஞர்கள் சங்கத்தின் மாநில துணை பொதுச் செயலாளர் சு.ராமச்சந்திரன் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்:
புதுச்சேரி மத்திய பல்கலைகழகத்தில் நாடக தந்தை சங்கரதாஸ் நிகழ்கலை நாடக பள்ளி இயங்கி வருகிறது. பல்கலைகழக நிர்வாகம் சங்கரதாஸ் நாடக பள்ளியின் பெயரை நீக்கியுள்ளது. தமிழ் நாடக மரபின் தந்தையாகவும் பேராசனகாவும் விளங்கிய நாடக தந்தை சங்கரதாஸ் சுவாமிகள் தனது வாழ்நாள் முழவதும் நாடகத்திற்காகவும ;அர்ப்பணித்து வாழ்ந்தவர். புதுச்சேரியில் அமைந்துள்ள இவரது நினைவிடத்தில் ஆண்டாண்டு முதல் தமிழகம் முழவதும் உள்ள எழுத்தாளர்கள் நினைவு தினத்தை கொண்டாடி வருகினறார்கள்.
இத்தகைய பெருமைக்குரிய சாங்கரதாஸ் சுவாமிகளின் பெயரை நீக்கியது தமிழ் பண்பாட்டுக்கும் தமிழ் மொழிக்கும் எதிரான நடவடிக்கை.சில நாட்களுக்கு முன்னால் வணிகவியல் துறையில் தமிழ்பாடத்திட்டம் நீக்கப்பட்டுள்ளது.
புதுச்சேரி பல்கலைகழக நிர்வாகத்தின் முடிவை தமுஎகச கண்டிப்பதோடு மீண்டும் சங்கரதாஸ் சுவாமிகள் பெயரை சூட்ட வேண்டும். பல்கலைகழக முடிவை எதிர்த்து கலைஇலக்கிய ஆர்வலர்களும், எழுத்தாளர்கள், அமைப்புகளும் ஒன்று சேர்ந்து குரல் கொடுக்க வேண்டும் என்று தமுஎகச அரை கூவி அழைக்கிறது.

No comments:

Post a Comment