புதுச்சேரி காங்கிர° ஆட்சியில் விளையாட்டுத்துறை புறக்கனிக்ப்பட்டு வருகிறது என்று மார்க்சி°ட் கட்சி குற்றம்சாட்டியுள்ளது.
சிபிஎம் புதுச்சேர் பிரதேச செயலாளர் வெ.பெருமாள் வெளியிட்டுள்ள அறிக்கையில்:- புதுச்சேரி மாநிலத்தில் மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறையின் அனுமதியோடு 1994ல் ராஜீவ்காந்தி விளையாட்டு பயிற்சி பள்ளி துவங்கப்பட்டது. கால்பந்து, ஹாக்கி, கைபந்து, தடகள விளையாட்டு, கிரிக்கெட் ஆகிய விளையாட்டுகளில் திறன் உள்ளவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது. இந்த விளையாட்டு மைதானத்தில் கடந்த 16 ஆண்டுகளாக அடிப்படை வசதிகள் கூட இல்லாமல் இயங்கி வருகிறது. புதுச்சேரியின் 4 பிராந்திய மாணவர்களும் தங்கி பயிற்ச்சி பெற்றுவரும் நிலையில் சுகாதாரமற்ற நிலையிலும் உப்பளம் விளையாட்டு மைதானம் உள்ளது. நாள் ஓன்றுக்கு ரூ.125விதம் உணவுக்காக அரசு ஓதுக்கிறது. ஆனால் தரமான உணவுகள் வழங்கப்படுவதில்லை அனைத்திலும் ஊழல் கேடுகளும் நீடித்து வருகிறது.
இதனால் மாணவர்களின் சேர்க்கை குறைந்து வருவதுடன் இந்திய அளவில் புதுச்சேரி மாணவர்களின் விளையாட்டு திறன் குறைந்து வருகிறது.
99ஆம்ஆண்டு கல்வித்துறை +மூலம் காலப்பட்டில் 25 ஏக்கர் நிலம் ராஜீவ்காந்தி விளையாட்டு பள்ளிக்கு கையக படுத்தப்பட்டது. மேலும் அணைத்து விளையாட்டு வசதிகள் உள்ளடக்யி மாதிரி வரைப்படமும் பொது பணித்துறையினால் வெளியிடப்பட்டது. ஆனால் நிதி ஓதுக்கியும் இது நாள் வரை விளையாட்டு மைதானம் அமைக்கப்படவில்லை மறுபுரம் ஏனாம் பகுதியில் விளையாட்டு அரங்கம் கட்டுவதற்கு திட்ட ஓதுக்கீடு ரூ.7.5 கோடி இதற்கு சுமார் 22 கோடி ரூபாய் செலவிடப்பட்டுள்ளது. ராஜீவ் காந்தி விளையாட்டு பள்ளிக்காக சுற்றுச்சுவர் கட்ட ஓதுக்கப்பட்ட ரூ 1 கோடியையும் ஏனாம் பகுதிக்கு திருப்பிவிடப்பட்டுள்ளது.
ஏனாம் பகுதியில் அமையஉள்ள விiயாட்டு அரங்கம் நீச்சல் குளம் ஆகியவை மார்க்சி°ட் கட்சி வரவேற்கிறது அதே நேரத்தில் நிலம் கையகப்டுத்தப்பட்டு 11 ஆண்டுகளாகியும் புதுச்சேரி காலப்பட்டில் அமைய உள்ள விளையாட்டு மைதானம் கட்டுவதற்கு நிதி ஓதுக்காதது விளையாடு வீரர்களை காங்கிர° அரசு வஞ்சித்து வருகிறது.
எனவே நான்கு பிராந்தியங்களிலும சம வளர்ச்சி ஏற்படுத்தபட வேணடும்.விளையாட்டு துறைக்கு ஓதுக்கப்பட்ட நிதி அந்த நிதியை செலவு செய்தது குறித்து மாநில துணை நிலைஆளுநர் மற்றும் முதல்வர் ஆகியோர் நீதி விசாரணை நடத்த வேண்டும் என்று மார்க்சி°ட் கட்சி கேட்டுகொள்வதோடு. இதற்கு எதிராக மாணவர்கள் அணைத்து இளைஞர் அமைப்புகளும் ஓன்றுபட்டு போராட முன் வர வேண்டும். இவ்வாறு பெருமாள் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment